Author: வண்ணதாசன்
ஒரு நாய்க் குட்டி முனங்கிக் கொண்டே வந்தது. நல்ல வெள்ளை. நெற்றியில் காப்பி சிந்தின மாதிரி வேறு நிறம்.
ஒரு சிறு நூல் பந்து போல, ஒரு அகல மரக் கரண்டி மாதிரித் தலையைக் குனிந்து கொண்டே அது தன்னுடன் வருவது அவருக்குப் பிடித்துப் போயிற்று.
‘நம்ம வீட்டுக்குப் போலாமா?’
ஞாபகத்தில் இருக்குமா என்ன? குரல் என்ன, ஜான்சிக்கு ஒரு குறிப்பிட்ட வீட்டைத் தாண்டும்போது அடித்த மருதாணிப் பூ வாசத்தைக்கூட ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும்.
எல்லாவற்றையும் கேட்டு முடித்துவிட வேண்டும் என்று அவசியமா என்ன?
துக்க வீட்டுக்குள் ‘யார் நீ’ என்று ஜான்சியை யாரும் கேட்கப் போவது இல்லை. அடையாளம் சொல்ல வேண்டியது இல்லை. துக்கம்தான் அடையாளம்
துக்கம் பூக்களைக்கூட வேறு நிறம் கொள்ளவைத்துவிடும்போல.
சோமு ‘ஜான்சி’ என்றுகூட இப்போது கூப்பிடலாம். நன்றாக இருக்கும். கூப்பிட முடியாது என்று தெரிந்தும் கூப்பிட வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதானே அவஸ்தை.