Author: பெருமாள் முருகன்
போய் வருகிறேன் என்று ஆனந்தமாகவே விடைபெற்றாள் பூனாச்சி.
அண்ணாந்தால் அல்லவா வானம் தென்படும்?
போய் வருகிறேன் என்று ஆனந்தமாகவே விடைபெற்றாள் பூனாச்சி.
இயல்பிலேயே குனிந்துவிட்டால் ஏது தளை?
பூனாச்சிக்கு வெட்கமாக இருந்தது.
‘பேசற வாயும் திங்கற வாயும் ஒன்னுதான். ஆனாலும் எல்லாத்தயும் பேசீர முடியுமா? இல்ல, எல்லாத்தயும் தின்னர முடியுமா?’ என்றாள் கிழவி.
அன்றைக்குத்தான் பூனாச்சி கழுத்தில் முதன்முதலாகக் கயிறு ஏறியது. அதன்பின் அது ஒருபோதும் இறங்கவேயில்லை.
‘தூர இருக்கறவங்களுக்கு அதிசயம். பக்கத்துல இருக்கறவங் களுக்குத் தொந்தரவு’
போனமுறை இங்கே வந்தபோது பருவம் கூடாத சிறுபெண். இப்போதோ ஏழு பிள்ளைகளை ஒரே பேற்றில் ஈன்று வளர்த்துப் பறி கொடுத்து எல்லாத் துன்பங்களையும் கண்டு சோர்ந்திருக்கும் உருவம்.